சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு வியாபாரிகள் அதிகம் வர நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு வியாபாரிகள் அதிகம் வர நடவடிக்கை

Added : ஜூன் 25, 2020
Share
சின்னசேலம் : சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு வியாபாரிகள் அதிகம் வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட நயினார்பாளையம், கல்லாநத்தம், சிறுவத்துார், கனியாமூர், பைத்தந்துறை உட்பட 50 கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளைவிக்கும் எள், மக்காச்சோளம், உளுந்து, வேர்க்கடலை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட விளை பொருட்களை

சின்னசேலம் : சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு வியாபாரிகள் அதிகம் வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட நயினார்பாளையம், கல்லாநத்தம், சிறுவத்துார், கனியாமூர், பைத்தந்துறை உட்பட 50 கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளைவிக்கும் எள், மக்காச்சோளம், உளுந்து, வேர்க்கடலை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட விளை பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வர சின்னசேலத்திற்கு மார்க்கெட் கமிட்டி துவங்கப்பட்டது. கமிட்டியில் 4 குடோன்கள், ஒரே நேரத்தில் 4,500 மெட்ரிக் டன் பொருள் இருப்பு வைக்கும் வசதி, 1,000 டன் பொருள் வைத்து கடன் பெரும் வசதியும் உள்ளன.

மேலும் விளை பொருட்களின் வரத்து அதிகமானாலும் இருப்பு வைக்கும் வசதி, வாகனங்கள் நிறுத்த இடம். இ - பேமென்ட் என வசதிகள் இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் 17 கி.மீ., தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு விளை பொருட்களை கொண்டு செல்வது பல ஆண்டுகளாக நீடிக்கிறது.இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் ஏல போட்டி இல்லை. இதனால், விலையேற்றம் என்பது இல்லை. ஆனால், கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் விளை பொருட்களுடன் 1,000 ரூபாய் கூடுதலாகவே ஏல விற்பனை நடைபெறுகிறது.

இதன் காரணமாக விவசாயிகள் சின்னசேலம் செல்லாமல், கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றோம். கடந்த ஆண்டு சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் 32 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது என்கின்றனர்.சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் கள்ளக்குறிச்சி கமிட்டி போன்றே அதிக அளவிலான வியாபாரிகளுக்கு ஏல விற்பனை நடைபெற மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X