சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத் தகராறில் ஒருவர் கைது

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே நிலத் தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த பொ.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ரகுராமன், 37; இவரது பெரியப்பா மகன் சக்திவேல். இவர், நிலத்தில் வரப்பு மடித்துக் கொண்டிருந்தார். இதற்கு, அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் கலைச்செல்வன், 31; எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.அப்போது, அங்கிருந்த ரகுராமன் தகராறை விலக்கச் சென்ற போது அவரை, கலைச்செல்வன் அவரது தம்பி கவியரசன், தந்தை கருணாநிதி, உறவினர் பொன்முடி ஆகியோர் தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து கலைச்செல்வனை கைது செய் தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X