கடலுார் மாவட்ட எல்லைகள் மூடல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்ட எல்லைகள் மூடல்

Added : ஜூன் 25, 2020
Share

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், எல்லை பகுதி சாலைகள் அடைக்கப்பட்டு, வெளி மாவட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

சென்னை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கடலுார் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. அதையொட்டி மாவட்ட எல்லை பகுதிகளில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இங்கு, மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டு, வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்படுகிறது. வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.கடலுார் மண்டலத்திற்குட்பட்ட கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இ-பாஸ் இல்லாமல் சென்று வந்த நிலையில், நேற்று முதல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்ட எல்லைகளில் கெடுபிடி அதிகரிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள், கார்கள் என, வெளி மாவட்ட வாகனங்கள் எதையும் அனுமதிக்காமல் போலீசார் திருப்பி அனுப்பினர். இ-பாஸ் வைத்திருந்தாலும், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.கடலுார் சின்னகங்கணாங்குப்பம் உள்ளிட்ட 11 செக்போஸ்ட்களிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கெடுபிடி தீவிரப்படுத்தப்பட்டது. எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் ஒவ்வொரு செக்போஸ்டாக சென்று ஆய்வு நடத்தினார்.கடலுார் அடுத்த புதுச்சேரி எல்லையான முள்ளோடையிலும் தமிழக பகுதி வாகனங்களை போலீசார் அனுமதிக்காமல் கெடுபிடியை தீவிரப்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X