பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக, கூடுதலாக, 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தொற்று அறிகுறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனையில், தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.இருப்பினும், மாவட்டத்தில், தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனையில், கூடுதல் படுக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் ஜீவா கூறியதாவது:மாவட்ட அரசு பொது மருத்துவமனையில், கொரோனா வைரசுக்கு, 681 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, 124 பேர் மட்டுமே, சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனையில், 200 படுக்கைகள் உள்ளன. எனினும், நோயாளிகளுக்கு வசதி ஏற்படுத்தும் வகையில், புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில், 100 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன.

மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளோர் மட்டுமே, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். மற்றவர்களுக்கு, இங்கேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X