பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம்: மத்திய அரசின் திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தில், இந்தாண்டு, சிறிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்ததாவது:சென்ற ஆண்டு வரை, இத்திட்டத்தில் கடன் பெறாத விவசாயிகளுக்கு கட்டாயமாகவும், கடன் பெற்ற விவசாயிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையிலும் காப்பீடு செய்யப்பட்டு வந்தது.தற்போது, இத்திட்டத்தில் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும், விருப்பத்தின் அடிப்படையில் பயிர் காப்பீடு செய்யலாம்.

விவசாயிகள் அனைவரும், தங்களது நிலத்தின் அடங்கல் நகல், பட்டா நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, பயிர்களை காப்பீடு செய்யலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X