சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டேங்கர் லாரி மீது மினி லாரி மோதல்: போலீஸ்காரர் காயம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே மினி லாரி மற்றும் காஸ் டேங்க்கர் லாரிகள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் காயமடைந்தார்.

சிவகங்கை மாவட்டம், சுந்தரநடப்பு பகுதியைச் சேர்ந்த காந்திராஜா மகன் சரவணகுமார், 32; இவர், அங்குள்ள ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் போலீஸ் கேன்டீனுக்கு தேவையான பொருட்களை சென்னையில் இருந்து மினி வேனில் ஏற்றிக் கொண்டு சிவகங்கை திரும்பினார். வேனை சரவணகுமார் ஓட்டினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் அடுத்த மடப்பட்டு பைபாஸ் மேம்பாலத்தில் வந்த போது, முன்னால் சென்ற காஸ் டேங்க்கர் லாரி மீது மினிலாரி மோதியது.

இதில் சரவணகுமார் வலது காலில் முறிவு ஏற்பட்டது. உடன், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X