தேவையின்றி மருத்துவமனையில் சுற்றுவதை தவிருங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தேவையின்றி மருத்துவமனையில் சுற்றுவதை தவிருங்கள்'

Added : ஜூன் 25, 2020
Share
திருத்தணி: 'அரசு மருத்துவமனையில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்க வேண்டும்' என, தலைமை மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.திருத்தணி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஒருவருக்கு, நேற்று

திருத்தணி: 'அரசு மருத்துவமனையில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்க வேண்டும்' என, தலைமை மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

திருத்தணி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஒருவருக்கு, நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

மேலும், இரு செவிலியர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வேகமாக பரவும் கொரோனா தொற்றால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும் சிலர், தினமும், தேவையில்லாமல் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.திருத்தணி அரசு தலைமை மருத்துவர் சீ.ராதிகாதேவி கூறியதாவது:கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், மிகவும் அவசியம் என்றால் மட்டுமே, அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். தொடர் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். எனவே, அரசு மருத்துவமனையில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X