சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுய தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் தொழில் மையத்திற்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கடலுார் : சுய தொழில் செய்ய விரும்பும் படித்த இளைஞர்கள் மாவட்ட தொழில் மையத்திற்கு விண்ணப்பித்து பயன்பெற கலெக்டர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர், விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்ட தொழில் மையம் படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை தருவதற்கும், தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ஒரு வழிகாட்டி மையமாக செயல்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கிட புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி திட்ட அறிக்கை தயார் செய்தல், நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற வசதி செய்தல் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தருதல் ஆகிய உதவிகளை செய்து வருகிறது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து 25 சதவீதம் மானியத்துடன் (ரூ.30 இலட்சத்திற்கு மிகாமல்) கூடிய கடனுதவி பெறவும் 3 சதவீதம் பின்முனை வட்டி மானியம் பெறவும் வழி வகை செய்யப்படுகிறது.பொது பிரிவினர் 21 வயது முதல் 35 வயது வரையும், சிறப்பு பிரிவினர் 21 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற் கல்வி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட மதிப்பீடு ரூ.10 இலட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் சுற்றுப்புற சூழலுக்கு தகுந்தாற்போல் அனைத்து லாபகரமான உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் மற்றும் ஏற்றுமதி தொழில்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும். விண்ணப்பதாரர்கள் www.msmeonline.tn.gov.in/needs , என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் நேர்முக தேர்வின்றி வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண் 04142- 290116 மூலம் தொடப்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X