சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரவள்ளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் மரவள்ளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சங்கராபுரம் வட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் பெரும்பாலான விவசாயிகள் நெல், கரும்பு போன்றவற்றை பயிரிடாமல் குறைந்த தண்ணீர் செலவில் 10 மாத பயிரான மரவள்ளி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.இதில், முள்வாடி, குங்கும ரோஸ், தாய்லாந்து ஆகிய வகைகள் உள்ளன. ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 20 டன்னும், அதிக பட்சமாக 25 டன்னும் மகசூல் கிடைக்கும்.சங்கராபுரம் வட்டத்தில் அரசம்பட்டு, பாலபட்டு, நெடுமானுார், பொய்குனம், மூலக்காடு உள்ளிட்ட கிராமங்களில் 1000 ஏக்கரில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அறுவடை செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கை சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள கிழங்கு மில்லுக்கு விற்பனை செய்கின்றனர். 80 கிலோ கொண்ட ஒரு மூட்டை 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்பனையாகிறது.குறைந்த அளவு தண்ணீரில் வறட்சியைத் தாங்கக் கூடிய மரவள்ளி சாகுபடி செய்வதில் சங்கராபுரம் பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X