சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடவு பணிக்கு சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்; போலீசாரை கண்டித்து பெண்கள் போராட்டம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 நடவு பணிக்கு சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்; போலீசாரை கண்டித்து பெண்கள் போராட்டம்

சோழவரம் : நடவு பணிகளுக்காக வாகனம் ஒன்றில் பயணித்த பெண்களை, போலீசார் தடுத்து நிறுத்தி, மூன்று மணி நேரம் வெயிலில் நிற்க வைத்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோழவரம் அடுத்த, ஜனப்பசத்திரம் கூட்டுசாலையில், நேற்று காலை, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியபாளையம் அடுத்த, முக்கரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், வாகனம் ஒன்றில் வந்தனர்.அவர்கள் சோழவரம் அடுத்த, ஆங்காடு கிராமத்தில் நடவுப் பணிகளுக்கு செல்வதாக தெரிவித்தனர். சோழவரம் போலீசார் அவர்கள் கூறியதை செவி கொடுத்து கேட்காமல், சோழவரம் சுங்கச்சாவடிக்கு அழைத்து சென்றனர்.

சுங்கச்சாவடியில், மூன்று மணி நேரம் பெண்கள் வெயிலில் காத்திருந்தனர். போலீசார் அவர்களை விடுவிக்காததால், கொதிப்படைந்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதை தொடர்ந்து, வருவாய் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை சமாதானப்படுத்தி விவசாய பணிக்கு அனுப்பி வைத்தனர்.விவசாய பணிகளுக்கு சென்ற பெண்களை பிடித்து வைத்து, மூன்று மணி நேரம் வெயிலில் காத்திருக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே வாகனத்தில் அதிகப்படியான பயணிகள் வந்ததால், பிடித்தாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து விவசாய பணிகளுக்கு சென்ற பெண்கள் தெரிவித்ததாவது:நகரப் பகுதிகளுக்கு மட்டும், தமிழக அரசின், 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. கிராமப் பகுதிகளில் அன்றாட உணவிற்கு தவிக்கும் எங்களுக்கு இல்லை.எங்களுக்கு அரசின் எந்த உதவியும் கிடைக்கவில்லை. கூலி வேலைக்கு சென்றால்தான் எங்களுக்கு அன்றாட உணவு. விவசாய கூலி வேலைக்கு சென்றால், போலீசார் பிடித்து வைக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X