சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளிமாவட்ட போக்குவரத்து நிறுத்தம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கடலுார் : வெளி மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கடலுார் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், ஜூன் 1ம் தேதி முதல், அந்தந்த மண்டலங்களிடையே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், கடலுார் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு கடலுாரில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று கடுமையாக அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்த, நேற்று முதல் மண்டலங்களுக்குள் பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், மாவட்டத்திற்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்.

கடலுார் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து துவங்கியும், பயணிகள் வரத்து குறைவாக இருப்பதால், குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சென்ற பஸ்கள் நிறுத்தப்பட்டதால், கடலுார் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் பகுதிகளுக்கு மட்டுமே ஒருசில பஸ்கள் இயக்கப்பட்டது. பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X