ரஷ்ய அரசியல் சாசன திருத்தம் பொது ஓட்டெடுப்பு துவங்கியது

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மாஸ்கோ; ரஷ்யாவில், அதிபர் பதவிக்கான கால வரம்பு தொடர்பான, அரசியல் சாசன சட்ட திருத்தம் குறித்த பொது ஓட்டெடுப்பு நேற்று துவங்கியது.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக, ரஷ்ய அதிபர்,பிரதமர் பதவிகளை மாறி மாறி வகித்து வரும், விளாடிமிர் புடினின் பதவிக் காலம், 2024ல் முடிவடைகிறது.ஒப்புதல்இந்நிலையில், ரஷ்ய அதிபர், ஆறு ஆண்டுகள் வீதம், மேலும் இரு முறை பதவி வகிக்கலாம்; தற்போதைய அதிபர் மீண்டும் தேர்வானாலும் இது பொருந்தும் என, அரசியல் சாசன சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஓரின திருமணத்திற்கு தடை, சமூக நல திட்ட அமலாக்கம் உள்ளிட்ட அம்சங்களும், சட்ட திருத்தத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த சட்ட திருத்தத்திற்கு, பார்லி.,யின் இரு அவைகளும், உச்ச நீதிமன்றமும் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளன. இதையடுத்து, இந்த சட்ட திருத்தம் குறித்த பொது ஓட்டெடுப்பு, நேற்று காலை துவங்கியது. இதற்காக அமைக்கப்பட்ட ஓட்டுச் சாவடிகளில், மக்கள் ஓட்டு போட்டனர்.வரும், ஜூலை 1 வரை பொது ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.இதில், அரசுக்கு ஆதரவாக, 50 சதவீதத்திற்கு மேல், ஓட்டுக்கள் விழுந்தால், அரசியல் சாசன சட்ட திருத்தத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர, உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கும். இதன் மூலம், ரஷ்ய அதிபராக, புடின், 2036 வரை நீடிக்க முடியும்.

இதற்கிடையே, கொரோனா அச்சம் காரணமாக, வீட்டில் அடைந்து கிடைக்கும் மக்களை ஓட்டுச் சாவடிக்கு அழைத்து வர, மாகாண அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கிஉள்ளன. அரசியல் சாசன வினா - விடை போட்டி, பரிசுக் கூப்பன், இலவச கார், வீடு உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.கட்டாயம்அரசு நிர்வாகஅலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவற்றின் பணியாளர்கள், கட்டாயம் பொது ஓட்டெடுப்பில் பங்கேற்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பொது ஓட்டெடுப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.கொரோனா பரவல் காரணமாக, பொது ஓட்டெடுப்பு நடத்த போதிய அலுவலர்கள் இல்லாத நிலையில், கள்ள ஓட்டு மூலம் ஆட்சியை தக்க வைக்க, புடின் முயற்சிப்பதாக அவை குற்றஞ்சாட்டியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
26-ஜூன்-202009:32:09 IST Report Abuse
sankaran vaidyanathan ரஷ்ய நாட்டைப்போல இந்தியாவிலும் பிஜேபி கட்சி நீண்ட காலம் அரசோச்ச பொது ஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X