பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு: பறக்கும் படை கண்காணிப்பு தீவிரம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
கொரோனா தடுப்பு: பறக்கும் படை கண்காணிப்பு தீவிரம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பறக்கும்படையினர் ஆய்வு செய்து, விதிமுறை மீறியவர்களுக்கு, 13,400 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு கட்டமாக, அந்தந்த தாலுகாவில் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சியில், சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தார் சசிரேகா, நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேஷ், துணை தாசில்தார் ஜோதிபாசு, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், தலைமை காவலர் அகமது ெஷரிப் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாதது; 'மாஸ்க்' அணியாதவர்களுக்கு அபாரதம் விதித்து, இலவச 'மாஸ்க்' வழங்கப்பட்டது.அதிகாரிகள் கூறியதாவது:வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள், 'மாஸ்க்' அணியாமல் இருப்பதுடன், கூட்டமாக நின்று பேசுகின்றனர். வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில், சமூக இடைவெளி முறையாக பின்பற்றவில்லை.
அரசு நிர்ணயித்த நேரத்துக்கும் கூடுதலாக கடைகள் செயல்படுவதாக புகார்கள் வந்தன.இதை கண்காணிக்கவும், சப் - கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து விசாரணை செய்யப்படுகிறது.'மாஸ்க்' அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும்; வணிக நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் 'சீல்' வைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில், 13,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், கடைக்காரர்கள் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றி, நோய் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X