டிரம்பை சீண்டும் பெலோசி

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர், பராக் ஒபாமா கொண்டு வந்த, 'ஒபாமாகேர்' என்ற மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு, குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர், டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த திட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கின் விசாரணை விரைவில் வர உள்ளது. இந்நிலையில், அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரான,ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, நான்சி பெலோசி, புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.இது, ஒபாமாகேர் திட்டத்தை மேலும் பலருக்கும் விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள நிலையில், இது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X