தமிழ்நாடு

30 செவிலியருக்கு கொரோனா பாதிப்பு; கூடுதல் ஆட்கள் நியமனம் எப்போது?

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், செவிலியர், மருத்துவர் என, 30 பேருக்கு கொரோனா தொற்று பாதித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் ஆட்கள் நியமிக்க வேண்டியது அவசியம்.

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது, 100 பேர் கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தினமும், 30க்கும் மேற்பட்ட பிரசவம் நடைபெற்று வருகின்றன. இங்கு பணிபுரியும் மருத்துவர், செவிலியர் என, 30 பேர் வரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால், பிற நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க, ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 160 நர்ஸ்கள், 68 மருத்துவர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பல்வேறு துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.தற்போது, மருத்துவர், செவிலியர் என, 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.

தற்போது, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால், திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.தற்போது, மருத்துவ கல்லுாரி வரவுள்ள நிலையில், கூடுதல் செவிலியர் மற்றும் மருத்துவர்களை, தமிழக அரசு நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X