சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனஉளைச்சலில் காவலர் தற்கொலை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பொன்னேரி : மனைவி இறந்த சோகத்தில் இருந்த, தலைமை காவலர் ஒருவர், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன், 43. இவர், மீஞ்சூர் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.ஒரு மாதத்திற்கு முன், இவரது மனைவி உடல் நலக்குறைவால் இறந்ததை தொடர்ந்து, விரக்தியிலும், மனஉளைச்சலிலும் இருந்து வந்தார்.

ஒரு மாதமாக விடுப்பில் இருந்தவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டில் கயிற்றில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, துரைமுருகனின் சடலத்தை கைப்பற்றினர் மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்தவர், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X