பொது செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை அதிரடி; ரூ.9.76 லட்சம் வசூல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரடங்கை மீறிய, 82,158 பேர் மீது, பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்து, 9.76 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்து உள்ளனர்.

இது குறித்து கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றினை தடுப்பதற்காக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை கண்காணிக்க, 46 பறக்கும் படை நியமிக்கப்பட்டு உள்ளது. இக்குழு, தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், அத்தியாவசிய கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுகிறதா, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா, உள்ளிட்டவற்றை கண்காணித்து வருகின்றனர்.

இதுவரை, விதிமீறியதாக, 82 ஆயிரத்து, 158 பேர் மீது வழக்கு பதிந்து, 9.76 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்டத்தில், முக கவசம் அணியாமல் மக்கள் சாலையில் நடமாடி வருகின்றனர். அவர்களுக்கு, தலா, 100 ரூபாய் அபராதம் வழங்கி, தலா, நான்கு முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டதாகவும், கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X