பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைபடுத்தப்பட்டோருக்கு காய்கறிகள் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

விருதுநகர்:விருதுநகரில் கொரோனா தொற்று பாதித்தோருக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் விலையில்லா காய்கறிகள் வழங்கப்பட்டு வருகிறது.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த 18 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உத்தரவுப்படி, தொற்று பாதித்தோருக்கு சத்தான உணவு வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ரூ.100 மதிப்புள்ள காய்கறிகள் அடங்கிய பைகள் புது பஸ் ஸ்டாண்ட் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் இருந்து நகராட்சி ஊழியர்கள் மூலம் தனிமைப்படுத்தப்பட்டோர் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதை நகராட்சி வருவாய் அலுவலர் சங்கர்கணேசன், வருவாய் ஆய்வாளர் ரவி கண்காணிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X