பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறிகள், பழங்கள் விற்பனை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சென்னை; மாநிலம் முழுவதும், காய்கறிகள், பழங்கள் விற்பனையை ஊரடங்கு முடியும் வரை தொடர, உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும், வேளாண் துறை வாயிலாக விவசாயிகளை ஒருங்கிணைத்து, 1,352 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுக்கள் வாயிலாக, சமுதாய நாற்றுகள் தயாரிப்பு, சாகுபடி, மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குழுக்களுக்கும், 5 லட்சம் ரூபாய் வரை, மானியம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி, வேளாண் கருவிகளை வாங்கி, வாடகைக்கு விடும் பணியிலும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஈடுபட்டு உள்ளன. ஊரடங்கு காலத்தில், காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யவும், இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வாயிலாக, மார்ச் முதல் தற்போது வரை, 12 ஆயிரத்து, 567 டன் காய்கறிகள் விற்கப்பட்டுள்ளன.இது மட்டுமின்றி, 153 தெளிப்பான்களை பயன்படுத்தி, பொது இடங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலக கட்டடங்களில், கிருமிநாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பால், மாட்டுத் தீவனம், கபசுர குடிநீர் வினியோகம், முக கவசம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளிலும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவுப்படி, உழவர் உற்பத்தியாளர்களுக்கு தேவையான உதவிகள், அந்தந்த மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலம் முடியும் வரை காய்கறிகள், பழங்கள் விற்பனையை தொடர, உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X