தமிழ்நாடு

திருவள்ளூரில் 3,௦௦௦ கடந்தது; செங்கையில் ஐவர் உயிரிழப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று, ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட, 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை, 3,085 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று, நேற்று முன்தினம், 2,907ஆக இருந்தது. நேற்று, 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை, 3,085ஆக உயர்ந்தது.இதுவரை, 1,874 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்; 51 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது, 1,160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாலங்காடு சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர், ஆறு நாட்களாக திருமழிசை காய்கறி மார்க்கெட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், காவல் நிலையம் மூடப்படவில்லை.

செங்கல்பட்டில் 191செங்கல்பட்டு மாவட்டத்தில், 4,212 பேருக்கு, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில், 2,355 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இந்நிலையில், சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்த, 60 வயது ஆண், தாம்பரத்தில், 68 வயது ஆண் ஆகியோர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால், நேற்று இறந்தனர்.தவிர, சென்னை, தனியார் மருத்துவமனையில் மூவர் இறந்தனர். மாவட்டத்தில் மொத்தம், 65 பேர் இறந்துள்ளனர்.பல்லாவரம் - 57, தாம்பரம் - 55, திருக்கழுக்குன்றம் - 26, செங்கல்பட்டு - 25, வண்டலுார் - 15, - திருப்போரூர், செய்யூர் - தலா ஐந்து, மதுராந்தகம் -- மூன்று என, 191 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு பேர் என, மொத்த பாதிப்பு, 4,407 ஆக உயர்ந்துள்ளது.இதில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், தனியார் மருத்துவமனையில், மருத்துவர் தம்பதிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அதேபோல், மாமல்லபுரம் அடுத்த கல்பாக்கம், அணுபுரம் என, நகரிய பகுதிகளில், 25 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரத்தில் 94காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,253 பேர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று புதிதாக, 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நகராட்சி - 20, குன்றத்துார் - 36, ஸ்ரீபெரும்புதுார் - 31, காஞ்சிபுரம் - நான்கு, உத்திரமேரூர் - இருவர், வாலாஜாபாத் தாலுகாவில் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,347 உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X