பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்காக 34 ஆயிரம் படுக்கை தயார்!

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சென்னை; சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 34 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை, 47 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 19 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநகராட்சி சார்பில், கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.அதன்படி, 55 கல்லுாரிகளில், 17 ஆயிரத்து, 500; மாநகராட்சி கல்யாண மண்டபங்கள், அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில், 5,560 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

மாநகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், 10 ஆயிரத்து, 844 படுக்கை வசதிகள் என, மொத்தம், 33 ஆயிரத்து, 904 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வசதி, இனிவரும் காலத்திற்கேற்ப அதிகரிக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X