சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெர்மனியில் இருந்து கடத்திய போதை மாத்திரைகள் பறிமுதல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 ஜெர்மனியில் இருந்து கடத்திய போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை; ஜெர்மனி நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'மெத்தா பேட்டமைன்' என்ற போதை மாத்திரைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜெர்மனி நாட்டின், பிராங்பர்ட் நகரிலிருந்து, சரக்கு விமானம், இம்மாதம், 19ம் தேதி, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த ஒரு பார்சலை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, வெள்ளை, மஞ்சள் நிறங்களில், 510 மில்லி கிராம் எடையிலான மாத்திரைகள் இருந்தன. ஆய்வக பரிசோதனையில், மெத்தா பேட்டமைன் போதைப்பொருள், மாத்திரைகள் வடிவில் இருப்பது தெரிந்தது.

இதன் மதிப்பு, மூன்று லட்சம் ரூபாய்.இறக்குமதியான பார்சல், ஈரோட்டில் உள்ள ஒரு முகவரிக்கு அனுப்புவதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. சுங்க அதிகாரிகள், அங்கு சென்று விசாரித்த போது, பார்சலை பதிவு செய்த நபர், கர்நாடக மாநிலம், பெங்களூரில் பணியில் இருப்பது தெரிந்தது. சுங்கத்துறையினர் பெங்களூரு சென்று, போதை மாத்திரைகளை பதிவு செய்த, கவிகுமார், 25, என்பவரை பிடித்து விசாரித்தனர்.பி.பி.ஏ., பட்டதாரியான கவிகுமார், பெங்களூருரில் உள்ள, 'அமேசான்' நிறுவனத்தில், பொருட்களின் தர ஆய்வு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். போதை பழக்கத்திற்கு அடிமையாகி, இந்த மாத்திரைகளை, இணையதளம் வாயிலாக, மருத்துகள் என பதிவு செய்து, இறக்குமதி செய்தது தெரிய வந்தது.அவரை, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X