அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஈரானில் சிக்கிய மீனவர்களை மீட்கச் சென்றது கப்பல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சென்னை; 'ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை, கப்பலில் அழைத்து வர, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்துள்ளார்

.அவரது அறிக்கை:தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 700 மீனவர்கள், ஒப்பந்த அடிப்படையில், ஈரான் நாட்டில், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும், விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதால், அவர்களால், தமிழகம் திரும்ப முடியவில்லை.

அவர்களை அழைத்து வர, நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக முதல்வர், வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்தினார்.அதைத் தொடர்ந்து, இந்திய துாதரக அதிகாரிகள், ஈரானில் தங்கியுள்ள மீனவர்களை சந்தித்தனர். அவர்களுக்கு உணவு மற்றும் பிற வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, ஈரான் நாட்டில் உள்ள, தமிழக மீனவர்களை, தமிழகம் அழைத்து வர, பிரத்யேக கப்பல், நேற்று புறப்பட்டது.இக்கப்பலில், தமிழகத்தை சேர்ந்த, 673 மீனவர்கள், விரைவில் துாத்துக்குடி துறைமுகம் வந்தடைவர்.இவ்வாறு, ஜெயகுமார் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X