கருணாநிதி வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பா? சென்னை போலீஸ் கமிஷனர் விளக்கம்!| Security of Karunanidhi's residence not lowered, says Police commissioner | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பா? சென்னை போலீஸ் கமிஷனர் விளக்கம்!

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (5)
Share
சென்னை; ''மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு பாதுகாப்பு குறைக்கப்படவில்லை,'' என, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.சென்னை, சேப்பாக்கத்தில், பத்திரிகையாளர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கான, வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீரை, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று வழங்கினார்.வழக்குப் பதிவுபின், வேப்பேரியில் உள்ள, போலீஸ்

சென்னை; ''மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு பாதுகாப்பு குறைக்கப்படவில்லை,'' என, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.latest tamil news
சென்னை, சேப்பாக்கத்தில், பத்திரிகையாளர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கான, வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீரை, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று வழங்கினார்.

வழக்குப் பதிவுபின், வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி:சென்னையில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட, 19ம் தேதியில் இருந்து, நேற்று வரை, போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக, 33 ஆயிரத்து, 201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஊரடங்கு உத்தரவை மீறியதாக, 36 ஆயிரத்து, 568 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத, முக கவசம் அணியாத, 16 ஆயிரத்து, 192 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு உணவு எடுத்து செல்லும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஒரே இடத்தில், 20க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். 'ஆர்டர்' வந்த பின், அந்த இடத்தில் இருந்து செல்கின்றனர்.இவர்கள் கூட்டமாக சேர்வதால், கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், சமூக இடைவெளிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்கள், முக கவசம் அணிவது இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அது போன்ற வாடிக்கையாளர்களுக்கு, கடைக்காரர்கள் பொருட்கள் விற்கக் கூடாது. சென்னை, சி.ஐ.டி., நகரில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என, எவரும் கோரிக்கை விடவில்லை. எனினும், அங்கு தற்போது, ஐந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு, கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X