சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேந்தோணி கால்வாயில் கலக்கும் கழிவுநீர்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 வேந்தோணி கால்வாயில் கலக்கும் கழிவுநீர்

பரமக்குடி:பரமக்குடி தாலுகா வேந்தோணி கால்வாயில்கழிவுநீர் செல்வதுடன்,கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வைகையில் இருந்து வரும் தண்ணீர் பார்த்திபனுார் மதகு அணையில் தடுக்கப்பட்டு, பிரதான கால்வாய்கள் மூலம் பல கிராம கண்மாய்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இக்கண்மாய் களின் செல்லும் தண்ணீர்மூலம் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன் பெருகிறது.

இந்நிலையில் தண்ணீரை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் கால்வாய்கள் பெரும்பாலும் கழிவுநீர் செல்லும் ஓடையாக மாறியுள்ளது. இதற்கு மத்தியில் கருவேல மரங்கள் மற்றும் செடி, கொடிகள் அடர்ந்து கால்வாய் தடம் மறைந்து வருகிறது.வேந்தோணி கால்வாய் வற்றாத கழிவுநீரால் நிரம்பி உள்ளது.

கால்வாயையொட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும்மக்கள் கொசுத்தொல்லையால் அவதியடைகின்றனர். கால்வாயைசீர்செய்ய பொதுப்பணித்துறையினர் கால்வாயை துார் வாரி கருவேலமரங்களை அகற்றுவதுடன் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X