அரசியல் செய்தி

தமிழ்நாடு

தவணை கேட்டு நெருக்கடி கூடாது நிதி மந்திரிக்கு கனிமொழி கடிதம்

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 தவணை கேட்டு நெருக்கடி கூடாது நிதி மந்திரிக்கு கனிமொழி கடிதம்

சென்னை; 'கடன் தவணை செலுத்தும்படி, வங்கிகள், நிதி நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுவினரை கட்டாயப்படுத்துவதை தவிர்க்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனுக்கு, தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, வங்கி கடன், கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்ட கடன்களின் தவணை செலுத்துவதற்கு, மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, ஆறு மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வங்கிகளிலும், மைக்ரோ நிதி நிறுவனங்களிலும், கடனுக்கான தவணைகளை செலுத்தும்படி கட்டாயப்படுத்துவதாக, மகளிர் சுய உதவி குழுவினரிடம் இருந்து, எனக்கு முறையீடுகள் வருகின்றன.ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களை மீறி, வங்கிகளும், மைக்ரோ நிதி நிறுவனங்களும், இப்படி கட்டாயப்படுத்துகின்றன. இதை தவிர்க்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது பற்றி, பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, கனிமொழி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
26-ஜூன்-202008:15:59 IST Report Abuse
Srinivasan Rangarajan அப்படியே நம்ம ஸ்கூல்களிலும் fees கட்ட சொல்லி பெற்றோர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது ..சரியா அக்கா...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
26-ஜூன்-202005:11:17 IST Report Abuse
Girija செழிப்பை பார்த்தால், கொரோனா காலத்திலும் உங்களுக்கு சம்பளம் ஒழுங்காக வருகிறது என்பது தெரிகிறது . பிறகு சொந்த செலவில் வீட்டுக்கு வாட்ச்மென் போட்டுக்கலாமே ? அரசு போலீஸ் பாதுகாப்பு எதற்கு ?
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
26-ஜூன்-202002:20:51 IST Report Abuse
Baskar நீ எங்கும் யாருக்கும் கடிதம் எழுதினாலும் ஒன்றும் நடக்க போவதில்லை. நானும் இருக்கிறேன் என்று காட்டி கொள்ள முனையாதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X