பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று புதிய உச்சம் ஒரே நாளில், 3,509 பேர் பாதிப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சென்னை; தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக, நேற்று ஒரே நாளில், 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநிலம் முழுதும், இதுவரை, 70 ஆயிரத்து, 977 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் பாதிப்பு, 50 ஆயிரத்தை நெருங்குகிறது.இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 88 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

அதில், நேற்று மட்டும், 32 ஆயிரத்து, 543 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், 3,509 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 8,423 பேர்பாதிக்கப்பட்டவர்களில், ௧௫௧ பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். சென்னையில், 1,834 பேர்; செங்கல்பட்டில், 191 பேர்; காஞ்சிபுரத்தில், 98 பேர்; மதுரையில், 203 பேர்; ராமநாதபுரத்தில், 140 பேர்; திருவள்ளூரில், 170 பேர்; வேலுாரில், 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு உள்ளது.

இதுவரை, மொத்தம், 10.8 லட்சம் பேரிடம் நடத்திய பரிசோதனையில், 70 ஆயிரத்து, 977 பேர், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், 3,481 பேர்; 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 8,423 பேர். சென்னையில், 47 ஆயிரத்து, 650 பேர்; செங்கல்பட்டில், 4,407 பேர்; காஞ்சிபுரத்தில், 1,488 பேர்; மதுரையில், 1,279 பேர்; திருவள்ளூரில், 3,085 பேர்; திருவண்ணாமலையில், 1,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மற்ற மாவட்டங்களில் பாதிப்பு, 1,000த்துக்கும் குறைவாகவே உள்ளது.45 பேர் பலிநேற்று, 2,236 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மொத்தம், 39 ஆயிரத்து, 999 பேர் குணமடைந்துள்ளனர்.

சில தினங்களில் உயிரிழந்தவர்களில், 45 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களையும் சேர்த்து, 911 பேர் இறந்து உள்ளனர்.சென்னையில், 694 பேர்; செங்கல்பட்டில், 65 பேர்; மதுரையில், 11 பேர்; திருவள்ளூரில், 51 பேர்; காஞ்சிபுரத்தில், 17 பேர்; திருவண்ணாமலையில், 10 பேர்; விழுப்புரத்தில், 12 பேர் இறந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில், 10க்கும் குறைவாகவே உயிரிழப்பு உள்ளது. தற்போது, கொரோனா பாதிப்புடன், 30 ஆயிரத்து, 64 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X