பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் நிவாரணம் தர நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சென்னை; மதுரை மாவட்டத்தில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில், ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் வழங்குவதற்காக, 53.93 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னையை தொடர்ந்து, மதுரை மாவட்டத்திலும், கொரோனா நோய் பரவலை தடுக்க, மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 24ம் தேதி முதல், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அப்பகுதிகளில் வசிக்கும், ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய், நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.

இதன்படி, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில், 5.39 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் உள்ளனர்.அவர்களுக்கு தலா, 1,000 ரூபாய் வழங்க, 53.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி, உணவு வழங்கல் துறை கமிஷனர், அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.அதை ஏற்று, அரசு, 53.93 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிட்டுஉள்ளது. இந்த பகுதிகளில், வரும், 27ம் தேதி முதல், நிவாரண தொகை, ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X