பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் இறந்தால் செய்ய வேண்டியது என்ன?

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சென்னை; 'கொரோனா வைரஸ் பாதிப்பால் இறப்பவர் உடலை, அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி, உடனே அடக்கம் செய்ய வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன், கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:'கொரோனாவால் இறந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுவோரின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை' என்ற புகார் அடிப்படையில், மத்திய அரசு சில விளக்கங்களை அளித்துள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், உடலை உடனடியாக, உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இறந்தவருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதியானால், உடனடியாக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி, உடலை அடக்கம் செய்ய வேண்டும். மேலும், இறந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X