அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடைமடைக்கு காவிரி நீர்: ஸ்டாலின் கோரிக்கை

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
 கடைமடைக்கு காவிரி நீர்:   ஸ்டாலின் கோரிக்கை

சென்னை; 'கடைமடை பகுதிக்கும், காவிரி நீர் செல்வதற்கு, துார் வாரும் பணிகளை, விரைவுபடுத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:மேட்டூர் அணை திறந்தும், இன்னும் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் போய் சேரவில்லை என்பது, மிகுந்த கவலை அளிக்கிறது. கடைமடை பகுதிக்கு நீர் செல்லும் வகையில், துார் வாரும் பணி மேற்கொள்ளப்படும் என, அறிவித்த அ.தி.மு.க., அரசு, அதை மேற்பார்வையிட, ஒரு கமிட்டியையும் நியமித்தது. ஆனால், உண்மையிலேயே, துார் வாரும் பணிகளை விரைவுப்படுத்தவோ அல்லது முறைப்படி முழுமையாக துார் வாரவோ முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.

விவசாயிகளின் வேதனை குரல்கள், இதுவரை முதல்வரின் காதுகளுக்கு எட்டவில்லை. துார் வாரும் பணிகளை பார்வையிட, காவிரி டெல்டாவிற்கு செல்லும் நேரத்திலாவது, இந்த வேதனை குரல்கள் எட்டும் என, நம்புகிறேன்.அதிகாரிகளை அழைத்துப் பேசி, கடைமடை பகுதிக்கு காவிரி நீர் செல்வதற்கும், துார் வாரும் பணிகளை விரைவுபடுத்தவும், விவசாயிகளுக்கு தேவையான கடன் உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
26-ஜூன்-202021:43:57 IST Report Abuse
sankar காவிரியை கர்நாடகாவிடம் விற்ற பரம்பரை - இப்படி பேச வாய் கூசவில்லையா மிஸ்டர்
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
26-ஜூன்-202018:36:37 IST Report Abuse
ravi தொளபதி பேசுவதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது - அவர்கள் ஆட்சியில் இருந்தால் தண்ணீர் தமிழகத்துக்குள் வரவிட்டிருக்கமாட்டேங்களே - எப்படியா தண்ணீர் தமிழகத்துக்கு வந்ததுன்னு ஆச்சர்யத்தில் கொஞ்சம் உளறுகிறார் - விடுங்கள்
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
26-ஜூன்-202014:27:36 IST Report Abuse
thamodaran chinnasamy நீரே ஒரு கடை மடை, காலத்தே நீர் திறந்து விவசாயிகளின் நெஞ்சத்தில் நிலைபெற்று நிறைந்து இருக்கின்றது அரசு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X