கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சசிகலா பினாமி என சொத்து முடக்கம் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சென்னை; சசிகலாவின் பினாமி என, தொழில் அதிபரின் சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, பெரம்பூரை சேர்ந்த வி.எஸ்.ஜெ.தினகரன் தாக்கல் செய்த மனு:பெட்ரோல் பங்க், ஆட்டோமொபைல் நிறுவனங்களை நடத்தி வருகிறேன். என் அலுவலகத்தில், 2015ல் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

அதைத் தொடர்ந்து, 2009 முதல், 2014 - 15ம் ஆண்டு வரையிலான, வருமான வரி கணக்கு மதிப்பீடு குறித்து, எனக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.விளக்கம்என் மேல்முறையீட்டை விசாரித்த, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், மீண்டும் வருமான வரித்துறை அதிகாரியின் ஆய்வுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், வி.கே.சசிகலாவின் இடங்களில் நடந்த வருமான வரி சோதனையை தொடர்ந்து, 2017ல், என் இடங்களிலும் சோதனை நடந்தது.'கங்கா பவுண்டேஷன்ஸ்' நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், என்னிடம் விளக்கம் கோரப்பட்டது.பெரம்பூர், 'ஸ்பெக்ட்ரம் மாலில்' எனக்குரிய பங்காக, 18 கோடி ரூபாய் நான் பெற்றதாக, அதில் கூறப்பட்டது.மேலும், வருமான வரித்துறையில் பினாமி தடுப்பு பிரிவின் துணை ஆணையரிடம் இருந்து, நோட்டீஸ் வந்தது. அதில், வி.கே.சசிகலாவின் பினாமியாக நான் இருப்பதாகவும், ஸ்பெக்ட்ரம் மாலினை பினாமி சொத்தாக ஏன் கருதக்கூடாது எனவும், என்னிடம் விளக்கம் கோரப்பட்டது.நில உரிமையாளர்கள் இருவரும், கங்கா பவுண்டேஷன் நிறுவனமும் சேர்ந்து, ஸ்பெக்ட்ரம் மாலினை உருவாக்கினர்.

அடமானம்

அதில், 11 ஆயிரம் சதுர அடிக்கு மேலான இடத்தை, நான் வாங்கினேன். மேலும், ஒரு கடையையும் வாங்கினேன். பின், அந்த சொத்துக்களை வங்கியில் அடமானம் வைத்து, கடன் பெற்றேன்.சசிகலாவுக்கு, ஸ்பெக்ட்ரம் மாலினை விற்றது குறித்து, என்னிடம் கேள்வி எழுப்பினர். எனக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது. என்னை, சசிகலாவின் பினாமி எனக்கூற முடியாது.இந்நிலையில், சொத்துக்களை முடக்கி வைத்து, வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. எனக்கு சந்தர்ப்பம் வழங்காமல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவகாசம் கோரினார். இதையடுத்து, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X