கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சொத்து குவித்த அதிகாரி சிறை தண்டனை உறுதி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

மதுரை; வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, எஸ்.பி., அலுவலக கண்காணிப்பாளருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது.

போலீஸ் துறையில், 1971ல் தட்டச்சர் பணியில் சேர்ந்தவர் முத்துராமன்; விருதுநகர் எஸ்.பி.,யின் தனி உதவியாளராக பணிபுரிந்தார்.ராமநாதபுரம், கன்னியாகுமரி, எஸ்.பி., அலுவலக கண்காணிப்பாளராக, 1992 பிப்., 1 முதல், 1997 மார்ச், 31 வரை பணிபுரிந்தார்.அக்காலத்தில், வருவாய்க்கு அதிகமாக, 3 லட்சத்து, 71 ஆயிரத்து, 560 ரூபாய் மதிப்பில் சொத்துகள் சேர்த்ததாக, நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார், 2002ல் வழக்குப் பதிந்தனர்.முத்துராமனுக்கு ஓராண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம், 2011ல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், முத்துராமன் மேல்முறையீடு செய்தார்.நீதிபதி வேல்முருகன் உத்தரவு:சம்பந்தப்பட்ட சொத்துகள் சட்டப்பூர்வமாக சேர்க்கப்பட்டவை என நிரூபிப்பதற்கான ஆவணங்களை, மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை.சொத்து வாங்குவது தொடர்பாக, உயரதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. ஆவணங்கள், சாட்சிகளை கவனமாக பரிசீலித்து, கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.அதை, இந்நீதிமன்றம் உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்கிறது. மனுதாரர் மீதான தண்டனையை நிறைவேற்றவும், வருவாய்க்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X