பொது செய்தி

தமிழ்நாடு

சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களில் மாற்றம்?

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதிய கல்வி கொள்கை,cbse, books, lessons

சென்னை: புதிய கல்வி கொள்கை அமலுக்கு வர உள்ளதால், சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களில் மாற்றம் செய்வதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய - மாநில அரசுகளின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.


latest tamil news



இந்நிலையில், இந்த கல்வி ஆண்டில், புதிய கல்வி கொள்கை அமலாக உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கையின்படி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், புத்தகங்களில் திருத்தம் செய்ய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புத்தகங்கள் திருத்தப்பட்டால், என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களை பின்பற்றும், சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களில் மாற்றம் ஏற்படும் என, கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
26-ஜூன்-202006:20:03 IST Report Abuse
Nathan இந்த முக்ல் , வெள்ளையன் புகழ் பாடும், இந்திய விடுதலை உண்மை சரிதத்தை மறைத்து பொய்யுரை செய்த, நமது தென்னக வாட புல நல்லாட்சியரை இருட்டடித்த நேருவின் பாட திட்டங்கள் மாற்றப் படும் என நம்புகிறேன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X