காரில் சென்றவர் வெட்டி கொலை 2வது மனைவிக்கு போலீஸ் வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரில் சென்றவர் வெட்டி கொலை 2வது மனைவிக்கு போலீஸ் வலை

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
தஞ்சாவூர்; தஞ்சையில், பட்டப்பகலில் காரில் சென்றவர், வழி மறித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது இரண்டாவது மனைவியை, போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர், காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர் யூசுப், 45. திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், வல்லம் மேம்பாலத்தில், நேற்று மதியம், 1:30 மணிக்கு, காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த சிலர், யூசுப் காரை
 காரில் சென்றவர் வெட்டி கொலை 2வது மனைவிக்கு போலீஸ் வலை

தஞ்சாவூர்; தஞ்சையில், பட்டப்பகலில் காரில் சென்றவர், வழி மறித்துக் கொலை செய்யப்பட்டார்.

அவரது இரண்டாவது மனைவியை, போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர், காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர் யூசுப், 45. திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், வல்லம் மேம்பாலத்தில், நேற்று மதியம், 1:30 மணிக்கு, காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த சிலர், யூசுப் காரை வழி மறித்து நிறுத்தினர். கீழே இறங்கிய யூசுப்பை, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பலத்த காயமடைந்த யூசுப், அதே இடத்தில் உயிரிழந்தார்.குவைத்தில் வேலை பார்த்து வந்த யூசுப், இலங்கையைச் சேர்ந்த அசிலா என்பவரை காதலித்து, இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.தஞ்சை, காயிதே மில்லத் நகரில் வாழ்ந்து வந்த இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, பிரிந்து விட்டனர்.

இருவருக்கும் இடையே, இரண்டு ஆண்டுகளாக சொத்து பிரச்னை இருந்ததும், இது தொடர்பாக, தஞ்சாவூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில், அசிலா ஏற்கனவே புகார் செய்திருப்பதும், விசாரணையில் தெரிய வந்தது.இதன் காரணமாக யூசுப் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. தலைமறைவான அசிலா உள்ளிட்ட சிலரை, வல்லம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X