மது பாட்டில் பதுக்கிய அ.தி.மு.க., பிரமுகர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது பாட்டில் பதுக்கிய அ.தி.மு.க., பிரமுகர்

Added : ஜூன் 25, 2020
Share

மதுரை; மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக, அ.தி.மு.க., பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையில், ஊரடங்கால், 'டாஸ்மாக்' கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், சிலர் மது பாட்டில்களை ஏற்கனவே வாங்கி பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மதுரை கீரைத்துரை நாகுபிள்ளை தோப்பில், ஒரு வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக, மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சோதனையிட்டு, 480 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, 25 - 43 வயது ஆண்கள் இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நல்லுசாமி என்பவரை, தேடி வருகின்றனர். இவர், மதுரை, 3ம் பகுதி அ.தி.மு.க., அவைத் தலைவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X