கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மகன் மர்ம மரணம் தந்தை மீது குற்றச்சாட்டு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

மதுரை; மகன் சாவில் மர்மம் உள்ளதாகவும், மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கலான வழக்கில், அரசுத் தரப்பில் விபரம் பெற்றுத் தெரிவிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், தெரிவிளை இடாவைச் சேர்ந்த, ராணி தாக்கல் செய்த மனு;என் கணவர் ராபர்ட் வில்சன்; சென்னையில் தொழில் செய்கிறார். மகன் சாம் வில்சன், 22. வில்லிவாக்கத்தில் வசித்தோம். பின், அண்ணாநகருக்கு குடிபெயர்ந்தோம். கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதை கேள்வி கேட்டதால், எங்களை துன்புறுத்தினார். சிலருடன் சேர்ந்து சதி செய்து, வீட்டிலிருந்த மகன் சாம் வில்சன் வாயில் துணியால் மூடி, கட்டாயப்படுத்தி காரில் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின், கட்டாயப்படுத்தி போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். கணவரிடம் கேட்டபோது மிரட்டினார். மே, 26ல் மறுவாழ்வு மையத்திலிருந்து, 'உங்கள் மகன் அதிகமாக மருந்து உட்கொண்டு விட்டார்' என தகவல் வந்தது.அங்கு சென்றபோது, சாம் வில்சன், மின் விசிறியில் சடலமாக தொங்கினார். உடலில் காயங்கள் இருந்தன. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை நடந்தது.மகன் உடலை, குமரி மாவட்டம், வடவிளையில் அடக்கம் செய்தோம். மகன் மரணத்தில் மர்மம் உள்ளது. என் கணவர் பணம் மற்றும் அதிகார பலமிக்கவர். மகனின் உடலை தோண்டி எடுத்து, மறு பிரேத பரிசோதனை மற்றும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார். நீதிபதி புகழேந்தி, ''அரசு தரப்பில் விபரம் பெற்று ஜூன், 30ல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X