சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை கொரோனா பாதிப்பால் மன உளைச்சல்

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை கொரோனா பாதிப்பால் மன உளைச்சல்

திருநெல்வேலி; கொரோனா உறுதியானதால், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி டவுன், நெல்லையப்பர் கோவில் எதிரே உள்ள இருட்டுக்கடை அல்வா, பிரசித்தி பெற்றது.ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கிருஷ்ணசிங் குடும்பத்தினர், 1,900களில், இங்கு அல்வா உள்ளிட்ட இனிப்பு வியாபாரத்தை துவக்கினர்.கிருஷ்ணசிங்கின் மகன் பிஜிலிசிங்கின் மனைவியின் சகோதரர் ஹரிசிங், 70. இவர் தான், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இருட்டுக் கடையை நடத்தி வந்தார்.

சிறுநீரக பாதிப்புள்ள இவர், ஜூன், 23ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பெருமாள்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று உறுதியானது குறித்து, நேற்று காலை அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் வசிக்கும், டவுன் அம்மன் சன்னிதி தெருவில், மாநகராட்சி பணியாளர்கள், கிருமி நாசினி தெளித்து, தெருவை அடைத்தனர்.இந்த தகவல்கள், சமூக வலைதளங்களில் பரவின. ஹரிசிங்கிடம், அலைபேசியில் நண்பர்கள் விசாரிக்க துவங்கினர்.

இதனால் மனமுடைந்த அவர், மருத்துவமனையில் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கம்பியில், துண்டால் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.அவரது உடல், பரிசோதனைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையே, ஹரிசிங் வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் அவரது உறவினருக்கும், கொரோனா தொற்று உறுதியானது. அவரும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil kumar - coimbatore,இந்தியா
27-ஜூன்-202008:43:07 IST Report Abuse
Senthil kumar யாராக இருந்தாலும் நேர்மையான வழியில் வெற்றியின் உச்சத்தை தொட்டவர்கள் இம்மாதிரியான முடிவுகளை எடுக்கக்கூடாது. இது முன்னேற துடிக்கும் இளைஞர்களின் மனதில் ஒரு சங்கடத்தை உருவாகும்.
Rate this:
Cancel
Thomas - Al Khor,கத்தார்
26-ஜூன்-202011:22:31 IST Report Abuse
Thomas வருந்துகிறோம் வேறு மாநிலத்தில் இருந்து வந்து நெல்லைக்கு ஒரு உலக அடையாளம் தந்தவர். ஆனால் கொரானாவையும் வென்றிருக்கலாம்
Rate this:
Cancel
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
26-ஜூன்-202009:59:47 IST Report Abuse
sivam அவரால் வேறு யாருக்கும் பாதிப்பு வந்துவிடக்கூடாதுனு எடுத்த முடிவு, மானஸ்தன் தான். ஆண்டவர் ஏற்றுக்கொள்ளுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X