சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீதித்துறை மீது நம்பிக்கை வைக்கிறோம்'

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருநெல்வேலி,; போலீஸ் தாக்குதலில் பலியான ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உடல்களை நேற்று குடும்பத்தினர் பெற்று கொண்டனர். அப்போது 'நீதித்துறை மீது நம்பிக்கை வைக்கிறோம்' என ஜெயராஜ் மகள் பெர்சி தெரிவித்தார்.

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் 60. மகன் பென்னிக்ஸ் 31. தந்தை மரக்கடையும், மகன் அலைபேசி கடையும் நடத்தினர். ஜூன் 19 இரவில் ரோந்து போலீசார் ஊரடங்கை காரணம் காட்டி கடைகளை அடைக்க கூறினர். வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டு இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.

ஜூன் 20ல் கோவில்பட்டி கிளைசிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 22 இரவில் பென்னிக்ஸ், மறுநாள் காலையில் ஜெயராஜ் இறந்தனர்.இருவரின் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல்களை வாங்க குடும்பத்தினர் மறுத்தனர். கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்றும் ஜெயராஜ் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். அதன்பின் இருவரது உடல்களையும் குடும்பத்தினர் வாங்க முன்வந்தனர்.

ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி கூறுகையில், எங்கள் தந்தை, தம்பி கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தாய் செல்வராணியின் உடல்நலம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. தாக்கிய போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. நீதித்துறையினர் விசாரணை மேற்கொள்வதால் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் உடல்களை பெற்று செல்கிறோம்' என்றார். இருவரது உடல்களும் ஆம்புலன்ஸ் மூலம் சாத்தான்குளம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அரசு நிவாரணமாக குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.முன்னதாக விசாரணையின்போது தாக்கிய எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுகள் முருகன், முத்துராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். மற்ற போலீசாரும் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X