வட மாநிலங்களில் கன மழை பீஹாரில், 83; உ.பி.,யில், 24 பேர் பலி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பாட்னா; வட மாநிலங்களில் பெய்த கன மழையால், பீஹாரில், ௮௩ பேரும், உ.பி.,யில், ௨௪ பேரும் பலியாகி உள்ளனர். நாடு முழுதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இதை ஒட்டி, பீஹார் மற்றும் உ.பி., மாநிலங்களில், இரு தினங்களாக, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. பீஹாரில், பல்வேறு பகுதிகளில், நேற்று முன் தினம் இரவு பெய்த மழையின் போது, மின்னல் தாக்கி, ௨௦ பேர் பலியாகினர். நேற்று, இரண்டாவது நாளாக தொடர்ந்த மழையில், இறந்தோர் எண்ணிக்கை, ௮௩ பேராக உயர்ந்துள்ளது.

கோபால்கஞ்ச் மாவட்டத்தில், அதிகபட்சமாக, ௧௩ பேர் இறந்துள்ளனர். கன மழையால், கோபால்கஞ்ச், நவடா, மதுபானி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.பலியான, ௮௩ பேரின் குடும்பத்தினருக்கு, தலா, ௪ லட்சம் ரூபாய் நிவாரண உதவியை, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். உ.பி., மாநிலத்திலும், கன மழை, பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், மின்னல் தாக்கியதில், ௨௪ பேர் இறந்தனர். இது குறித்து, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இரு மாநில அரசுகளும் நிவாரண நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இம்மாநிலங்களை தவிர, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானாவிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் இருவர் பலியாகினர். வட மாநிலங்களில், இன்றும் கன மழைக்கு பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X