சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருந்திரி தீப்பற்றி வீடுகள் சேதம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 கருந்திரி தீப்பற்றி வீடுகள் சேதம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் கருந்திரி சுற்றும் போது ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி காயமடைந்தனர். வீடுகளின் மேற்கூரை ஓடுகள் நொறுங்கியது.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் எம்.டி.ஆர்., 7 வது தெருவை சேர்ந்தவர் கந்தவேலு 56, மனைவி மாரியம்மாள் 42, அனுமதியின்றி வீட்டிலேயே கருமருந்து திரி தயாரித்து கொடுக்கும் கூலி வேலை செய்கின்றனர். தயாரிக்கப்பட்ட திரிகளை வீட்டிற்குள் அடுக்கி வைத்திருந்தனர். அவற்றை பட்டாசு ஏஜென்ட்டுகள் வாங்கி செல்வர். நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் திரி சுற்றும் தீ விபத்து ஏற்பட்டு திரிகள் வெடித்து சிதறியதில் தம்பதியினர் காயமடைந்தனர்.

வீடுகளின் மேற் கூரையில் ஓடுகள் நொறுங்கியது. வீட்டிலிருந்த கட்டில், பேன், பிரிஜ் கருகியது. அருகில் இரு வீடுகளின் மேற் கூரை ஓடுகளும் சேதமடைந்தன. தம்பதியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X