பெரிய கண்மாயில் சேதமடைந்த மடைகள்: விவசாயிகள் வேதனை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் சேதம்அடைந்து வரும் மடைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மராமத்து பணி ஏதும் நடைபெறாமல் உள்ளதால் கண்மாயில் உள்ள பாசன மடைகள், 10 கண் மற்றும் எட்டு கண் வெளிப்போக்கி மதகுகள் சேதமடைந்து உள்ளன.குறிப்பாக கண்மாயில் உள்ள 20 மடைகளில் பெரும்பாலான மடைகள் சிதிலமடைந்தும் மதில்களில் விரிசல் ஏற்பட்டும் உள்ளன. மழை காலங்களில் கண்மாயில் தண்ணீர் நிரம்பினாலும் கண்மாய் நீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 110 விதியின் கீழ் இந்தகண்மாய் துார்வார 19 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை எந்தவித பணிகளும் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுஉள்ளன.எனவே கண்மாய்மராமத்து பணிகளைமழை காலம் துவங்கும் முன் மேற்கொள்ள அரசுநடவடிக்கையெடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X