பொது செய்தி

தமிழ்நாடு

காரீப் பருவத்துக்கு பயிர் காப்பீடு சாகுபடிக்கு ஏற்ப கால அவகாசம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:வட்டார வேளாண் அலுவலகங்களில், காரீப் பருவ சாகுபடிக்கு, பயிர் காப்பீடு செயல்பாடு துவங்கியது.கோவை மாவட்டத்தில் காரீப் பருவம் துவங்கியுள்ள நிலையில், இயற்கை இடர்பாடுகளால், விவசாயிகள் சந்திக்கும் இழப்பை ஈடுகட்ட, பயிர் காப்பீடு திட்டம் செயல்படுகிறது.கடன் பெறா விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நடவு செய்ய இயலாத சூழ்நிலை, முளைத்து கருகியது, பயிர் வளர்ச்சி காலத்தில் ஏற்படும் இடர்பாடுகள், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு ஆகியவற்றுக்கு காப்பீடு செய்யலாம்.குறுவை நெல், உளுந்து, பச்சைப்பயிறு, கொள்ளு மற்றும் எள் சாகுபடிக்கு, பயிர் காப்பீடு செய்ய, ஜூலை 31ம் தேதி கடைசி நாளாகும். நிலக்கடலை மற்றும் துவரை சாகுபடிக்கு, ஆக., 16ம் தேதிக்குள்ளும், பருத்தி, சோளம், மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு செப்., 15ம் தேதி கடைசி நாளாகும்.பயிர் காப்பீடு மேற்கொள்ள, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு, வட்டார வேளாாண் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண் அலுவலர்களை அணுகலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X