பொது செய்தி

தமிழ்நாடு

மறுநடவால் மறுவாழ்வு செழிப்படைந்த மரங்கள்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
மறுநடவால் மறுவாழ்வு செழிப்படைந்த மரங்கள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஜோதிநகரில், மறு நடவு செய்யப்பட்ட மரங்கள் செழிப்பாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில், கூடுதல் கட்டடத்துக்காக, 120 ஆண்டுகள் பழமையான இச்சி மரம் வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, மரத்தை வெட்ட மனமில்லாமல், நகராட்சி ஒத்துழைப்புடன் மருத்துவமனையில் இருந்து, வேருடன் எடுத்துச் சென்று ஜோதிநகர் பகுதியில் மறுநடவு செய்யப்பட்டது.அதேபோன்று, காந்தி மார்க்கெட் விரிவாக்க பணிக்காக, 30 ஆண்டுகளான அரச மரம் மற்றும் வேப்ப மரம் வேருடன் எடுத்து செல்லப்பட்டு, ஜோதிநகர் பகுதியில் நடவு செய்யப்பட்டது.இதனையடுத்து, பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக, 40 ஆண்டு பழமையான ஆல மரமும், தோண்டி எடுக்கப்பட்டு ஜோதிநகரில் நடப்பட்டது.மரங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதால், அவைகள் செழிப்பாக வளர்ந்து, பசுமையாக காட்சியளிக்கிறது. மரங்கள் மறுநடவு செய்யப்பட்ட இடத்தில், பூங்கா அமைக்கப்பட்டாலும் அந்த மரங்கள் பாதுகாக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X