பொது செய்தி

தமிழ்நாடு

திருமூர்த்தி அணை நீர் மட்டம் சரிவு: கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பில்லை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 திருமூர்த்தி அணை நீர் மட்டம் சரிவு: கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பில்லை

உடுமலை;உடுமலை திருமூர்த்தி அணையில் நீர் மட்டம் குறைந்து, கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு மட்டும் நீர் வெளியேற்றப்படுகிறது. பருவ மழையை பொருத்தே, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., பாசனத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
முதலாம் மண்டல பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு, கடந்த மாதம் நிறைவு செய்யப்பட்டது.திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக நீர் வரத்து இல்லாததோடு, தென்மேற்கு பருவ மழை தீவிரமடையாததால், பாலாறு மற்றும் நல்லாற்றில் இருந்து அணைக்கு நீர் வரத்தில்லை. இதனால், அணை நீர் மட்டம், குறைந்து காணப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 60 அடியில், 23.40 அடி நீர் மட்டமும், 653.60 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது. அணைக்கு நீர் வரத்தில்லாத நிலையில், குடிநீருக்கு வினாடிக்கு, 21 கன அடி வழங்கப்படுகிறது; இழப்பு, 6 கன அடி என, 27 கன அடி நீர் திறக்கப்படுகிறது. திருமூர்த்தி அணை, தளி கால்வாயை ஆதாரமாக கொண்டு, மடத்துக்குளம், குடிமங்கலம், பூலாங்கிணர், கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டங்களும், நகராட்சி குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. பாதிப்பில்லைஅணையில், திருப்தியான நீர் இருப்பு உள்ளதால், குடிநீருக்கு பாதிப்பில்லை, என அதிகாரிகள் தெரிவித்தனர். தென்மேற்கு பருவ மழை துவங்கினாலும், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், தீவிரமடையாததால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை.
தற்போது ஆண்டு பராமரிப்பு மற்றும் குடிமராமத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.அதிகாரிகள் கூறுகையில்,' நடப்பு மாதம் குறைவாக மழை பொழிவே உள்ளது. ஜூலையில், மழை தீவிரமடைந்து திட்ட தொகுப்பு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வழக்கமாக, ஆக.,மாதம், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். வரும் மாதத்தில் பெய்யும் மழையை பொருத்தே, இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X