காட்சிப்பொருளாக தண்ணீர் தொட்டி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
காட்சிப்பொருளாக தண்ணீர் தொட்டி

முதுகுளத்துார்:பருக்கைக்குடி முக்குரோட்டில் கருவேல்மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காட்சிப்பொருளாக உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி. முதுகுளத்துார் அருகே பருக்கைக்குடி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கிராமமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முக்குரோட்டில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.பின்பு தொட்டியை 2014 ஆம் ஆண்டு மராமத்துபணி செய்யபட்டுள்ளது.காலப்போக்கில் போர்வெல்லில் நீருற்றுகள் இல்லாததால் தொட்டியில் தண்ணீர் ஏற்றாமல் பயன்பாடற்ற நிலையில் விடப்பட்டது.

தொட்டியை சுற்றி கருவேல் மரங்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது.அதுமட்டும் இல்லாமல் மோட்டர் அறை அருகே இரவில் சிலசமூக விரோதிகள் மது அருந்தி வருகின்றனர்.எனவே காட்சிப்பொருளாக உள்ள தண்ணீர் தொட்டியை மராமத்து பணிசெய்து கிராமமக்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்..

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X