'இன்டர்நெட்' சேவை பாதிப்பால் அவதி : 'நெட்ஒர்க்' கிடைக்கல!'ஆன்லைன்' முறை கற்பித்தலில் சிக்கல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், மொபைல்போன் நெட்வொர்க் சரிவர கிடைக்காததால், 'ஆன்லைன்' வாயிலாக பாடம் கற்கும் மாணவர்கள், பணியாற்றுவோர் அனைவரும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில் மூன்று தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., என நான்கு நிறுவனங்கள் செல்போன் சேவை வழங்குகின்றன. பள்ளி, கல்லுாரிகள், வங்கிகளில் 'ஆப்டிக்கல் பைபர் கேபிள்' தொலைத்தொடர்பு இணைப்பு பெற்றுள்ளன. இந்நிலையில், கெரோனா பரவலால் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.மாறாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள், 'ஆன்லைன்' வகுப்பில் பாடங்கள் நடத்துகின்றனர். குழந்தைகள், வீட்டில் இருந்தபடியே, மொபைல்போனில், பிரத்யேக செயலியில் 'ஆன்லைன்' வகுப்புகளை கவனித்து, கல்வி கற்கின்றனர்.பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை, வீட்டில் இருந்தவாரே செயலி வாயிலாக, மாணவர்கள் நேரலையில் கண்டு, சந்தேகங்களுக்கு விளக்கமும் பெற்று படிக்கின்றனர்.இந்நிலையில், பல கிராமங்களில் மொபைல்போன் 'நெட்ஒர்க்' சேவை அடிக்கடி கிடைப்பதில்லை. இதனால், மாணவர்கள் 'ஆன்லைன்' வகுப்பில் தொடர்ச்சியாக பங்கேற்க முடியாமல் தவிப்புக்கு உள்ளாகின்றனர். இதற்கு தீர்வாக, 'நெட்ஒர்க்' நன்கு கிடைக்கும் பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று, கல்வி கற்கின்றனர். தற்போது, பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதும் பாதுகாப்பில்லாததாக மாறியுள்ளது.தடுமாறும் ஊழியர்கள்ஐ.டி., பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர், பொள்ளாச்சி கிராமங்களில் வீடுகளில் இருந்தே பணியாற்றுகின்றனர். அவர்களும், சரியான மொபைல் நெட்வொர்க், இன்டர்நெட் சேவை கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.'நெட்ஒர்க்' பாதிக்கும் பகுதிகளில், புதிதாக 'டவர்' அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை துவங்கி, நெருக்கடியான கால கட்டத்தில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிறப்பான சேவை வழங்க வேண்டும் என, ஐ.டி., நிறுவன ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.தீர்வு எதிர்பார்ப்புஇந்த சிக்கலுக்கு, சப் - கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகள் தலையிட்டு, மொபைல்போன் நிறுவனங்களிடம் பேசி, தீர்வு காண வேண்டும். தற்போதுள்ள அசாதாரண சூழலை கணக்கில் கொண்டு, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கிராமங்களில் தடையற்ற, வேகமான இன்டர்நெட் சேவை வழங்க முன் வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொதுத்துறை மற்றும் தனியார் தொலைத்தொடர்பு துறை சேவைக்காக, தேவைக்கேற்ப 'டவர்' அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால், மொபைல்போன் மற்றும் பிரத்யேக இன்டர்நெட் சேவை இணைப்புகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.இதனால், 'டவர்' மற்றும் கேபிள் இணைப்புகளில் வேகம் குறைந்துள்ளது. பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். ஊரடங்கு விலக்கப்பட்டதும், இந்நிலை மாறி விடும். தற்காலிக பிரச்னைக்காக, புதிதாக 'டவர்' அமைப்பது சாத்தியமற்றது,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X