பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகங்களுக்கு கட்டடங்கள் அர்ப்பணிப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 ஒன்றிய அலுவலகங்களுக்கு கட்டடங்கள் அர்ப்பணிப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டடத்தை, முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.ஆனைமலை ஒன்றிய அலுவலக கட்டடம், 2.5 கோடி ரூபாய் நிதியில், கட்டப்பட்டுள்ளது. புதிய அலுவலக கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது. கோவையில் இருந்து, காணொளி காட்சியில், முதல்வர் பழனிசாமி, ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். அமைச்சர் வேலுமணி, துணைசபாநாயகர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, துணைத்தலைவர் கோபால்ரத்தினம், ஒன்றிய ஆணையாளர் பாலசுப்ரமணியன், கிராம ஊராட்சிகள் பி.டி.ஓ., லதா ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றினர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்துக்கு, 2.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு, காணொளி காட்சியில், முதல்வர் அர்ப்பணித்தார். பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சியில், சப் - கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகாசலம், வடக்கு ஒன்றிய தலைவர், பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X