பொள்ளாச்சி, உடுமலையில் இன்று கடைகள் அடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி, உடுமலையில் இன்று கடைகள் அடைப்பு

Added : ஜூன் 25, 2020
Share

பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறையில், இன்று ஒருநாள் கடைகள் அடைக்கப்படுகின்றன.பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் அறிக்கை:கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவர், போலீஸ் ஸ்டேஷனில் இருந்த போது, உயிர் இழந்ததை அடுத்து, அஞ்சலி செலுத்தும் வகையிலும், நீதி கேட்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் நாளை (இன்று) கடையடைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை மற்றும் சார்பு சங்கங்களும் ஆதரவை தெரிவித்து, ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதேபோன்று, பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்கம் சார்பிலும், கடையடைப்புக்கு அழைப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.வால்பாறைதமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி, கடை அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, காலை, 10:00 மணி வரை கடைகள் அடைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ் கூறுகையில், ''மாநில தலைமை அறிவித்த படி, நாளை (இன்று) ஒரு நாள் முழு கடையடைப்பு நடத்தப்படும்,'' என்றார்.உடுமலைஉடுமலையில் வியாபாரிகள் சங்கம் சார்பில், இன்று ஒரு நாள் கடையடைப்பு நடத்தப்படுவதால், கடைகள், நிறுவனங்களை அடைத்து முழு ஒத்துழைப்பு தருமாறு, உடுமலை வியாபாரிகள் சங்க தலைவர் பாலநாகமாணிக்கம் தெரிவித்துள்ளார். பெதப்பம்பட்டி வியாபாரிகள் சங்கத்தினரும், கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, இன்று கடைகளை அடைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். -- நிருபர் குழு -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X