கொரோனா பரவலால் இடமாறுதல் இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலால் இடமாறுதல் இல்லை

Added : ஜூன் 25, 2020
Share

பொள்ளாச்சி:கொாரோனா வைரஸ் பரவலால், ரேஷன்கடை பணியாளர்களுக்கு இடமாறுதல் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வரும் வரை, ரேஷன்கடை பணியாளர்களுக்கு இடமாறுதல் செய்யக்கூடாது, என, தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.கோரிக்கையை பரிசலித்த, மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல அளவிலான இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா பரவல் காலத்தில், ரேஷன்கடை பணியாளர்கள், அரசு அறிவிக்கும் சிறப்பு அறிவிப்புகளை செயல்படுத்தி, ரேஷன்கார்டுகளுக்கு அத்தியாவசிய பொருள் வினியோகம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.இப்பணியாளர்களை தேவை ஏற்படும் இடங்களை தவிர, கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை இடமாறுதல் செய்வதை தவிர்க்கவேண்டும், என, தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X