சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கல்லுாரி மாணவர் பலி
சாத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டையூர் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் ராதாக்கிருஷ்ணன், 19. அணைக்கரைபட்டியில் பாட்டி வீட்டில் தங்கி சின்னக்காமன்பட்டி அரசு கல்லுாரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்தார். நேற்று காலை 11:30 மணிக்கு தண்ணீர் மோட்டார் சுவிட்சை இயக்கும் போது மின்சாரம் தாக்கி பலியானார்.அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி பெண் பலி

அருப்புக்கோட்டை: நாகலிங்க நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன் மனைவி ராணி 50. இவர் நேற்று காலை 6.45 மணிக்கு வீட்டில் மின் மோட்டாரை இயக்குவதற்காக 'சுவிட்ச்' ஐ தொட்ட போது மின்சாரம் தாக்கி பலியானார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தீ விபத்து

விருதுநகர்: தாசில்தார் அலுவலகத்தில நேற்று காலை 6:00 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு குழுவினர் தீயை அணைத்தனர். ரூ.ஒரு லட்சம் மதிப்பு பொருட்கள் சேதமடைந்தன. தாசில்தார் அறையில் முக்கிய ஆவணங்கள் தீயில் சாம்பலானது. மின் கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என தீயணைப்பு குழுவினர் தெரிவித்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவி மாயம்

சிவகாசி: ஏ.எஸ்.கே., தங்கையா ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் மாணவி இரு நாட்களுக்கு முன் உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பவில்லை. சிவகாசி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை

சிவகாசி: ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி பெருமாள் 29. குடும்பத் தகராறில் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றார். மனமுடைந்த பெருமாள் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

ரேசன் அரிசி பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் சிவில் சப்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ, எஸ்.ஐ., கார்த்திகைசெல்வம், ஏட்டு ரவி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்துார் கண்மாய்பட்டியிலுள்ள தனியார் அரிசி அரவை மில்லில் சோதனை நடத்தினர். அங்கு 11 சிப்பம் ரேசன் அரிசி, 70 சிப்பம் மாவு இருந்தது. அவற்றை கைப்பற்றி ஊழியர் தேரிராஜை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X